19. புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது, தீதாகப் பேசாதிருத்தல்.
==================================================================
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும் (குறள் 186)
விளக்கம்
மற்றவர் பழியை அவன் இல்லாதபோது கூறுபவன் அவனுடைய சொந்தப்பழிகள் பலவற்றுள்ளும் கடுமையானவைகளைத் தெரிந்து எடுக்கப்பட்டு அவன் எதிரிலேயே அவன் பழி கூறப்படும்.







