அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளரும் திருவள்ளுவர் மாவட்ட நீடாமங்கலம் கிழக்கு ஒன்றியக் கழக முன்னாள் அவைத் தலைவருமான ஒளிமதி சுவாமிநாதன் உடல்க் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் ஒளிமதி சுவாமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என முன்னாள் முதல்வரும் எதிர்கட்சிதலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.