காஞ்சிபுரத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் சிலிண்டர் மற்றும் வீட்டில் சமையல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சிலிண்டரை சிலர் ரயிலில் ஏற்றி செல்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கும் நிலையில் ரயிலில் சிலிண்டரை ஏற்ற யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைக் கண்டு கொள்ளாமல் விட்ட ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
அண்மையில் மதுரையில் ஆன்மீக சுற்றுலா வந்த ரயிலில் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் மக்கள் மனதில் இருந்தது வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ரயிலில் சிலர் சிலிண்டரை ஏற்றி வந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதே போல ரயில் சிலிண்டர் ரயிலில் எற்றி வரும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளது. எனவே இனியாவது ரயில்வே துறை இனியாவது விழித்துக்கொள்ளுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.