22. ஒப்புரவறிதல்
உலகத்தோடு ஒட்டி நடந்து பிறருக்கு உதவி செய்து வாழ்தல்.
===========================================================
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்
உலக உயிர்களையெல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவு உடைய
வன் செல்வம் ஊரினுள் இருக்கும் குடிநீர்க் நிரம்பியது போன்றதாகும்.