தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டட 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகிளர் உரிமைத் திட்டத்தை தொடங்கிச வைத்ததை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவான்மியூர் ராமச்சந்திரா கவென்ஷன் அரங்கில் நடைபெற்ற விழாவில் புதிய பயனாளிகளுக்கான மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார். விழாவில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), ஜே.எம்.எச்.ஹசன் மேளலானா (வேளாச்சேரி), ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்), கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் (கல்வி), ஷரண்யா அறி, தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர்கள் ஆர்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி, வி.இ.மதியழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.