கிராம மக்களை வாழ வைக்கும் ‘துடைப்பம்’ தயாரிப்பு தொழில்..!

திண்டுக்கல்:
துடைப்பம் தயாரிப்பு தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இந்த கே.அம்மாபட்டி கிராம மக்களுக்கு உள்ளது. இங்கிருந்து தான் டன் கணக்கில் துடைப்பம் தயாரித்து, வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முன்பு தென்னை மரங்கள் அதிகம் இருந்ததால், அதை சார்ந்த தொழில்களில் பலர் ஈடுபட்டனர். காலம் செல்ல செல்ல தென்னை மரங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. இதனால் பலர் மாற்று வேலைகளுக்குச் சென்றனர். ஆனால், தென்னங்கீற்றிலிருந்து துடைப்பம் தயாரிக்கும் தொழிலை கடந்த 25 ஆண்டுகளாக நத்தம் அருகேயுள்ள கே.அம்மாபட்டி கிராமத்தினர் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ள ஆத்தூர், அய்யம்பாளையம் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளிலிருந்து தென்னங்கீற்றுகளை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் அதை சீராக சீவி துடைப்பத்தை தயார் செய்கிறார்கள். இக்கிராமத்தில் உள்ள பலரின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த தொழில் உள்ளது. குறிப்பாக கிராமப் பெண்கள் அதிக அளவில் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் தெரிவித்ததாவது: இங்கு ஆண்டு முழுவதும் துடைப்பம் தயாரிக்கும் தொழில் நடைபெறுகிறது. எங்களுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கிடைக்கும் ஆர்டர்களை விட, வட மாநிலங்களிலிருந்துதான் அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன.

உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இங்கிருந்து தான் டன் கணக்கில் துடைப்பங்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றோம். குறிப்பாக டெல்லியில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் ‘துடைப்பம்’ மாகும். அதனால் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நேரத்தில் அக்கட்சி நிர்வாகிகளிடமிருந்து அதிக அளவில் துடைப்பம் தயார் செய்ய சொல்லி ஆர்டர்கள் கிடைக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட