புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் 12.04.2024 அன்று, பாங்காக்கிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய திரு முகமது முபின் என்ற பயணி சுங்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் 493 அரியவகை ஆமைகளைக் கடத்தி வந்தது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆமைகளைப் பெற்றுக்கொள்ள விமான நிலையம் வந்த தமிழக காவல்துறையில் பணிபுரியும் திரு எஸ் ரவிக்குமாரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.