காமன்வெல்த் பொது நிர்வாக செயலாளர்கள் கூட்டம் : பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு

லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் காமன்வெல்த் பொது நிர்வாகத் துறைச் செயலாளர்கள் கூட்டம் 2024 ஏப்ரல் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பை காமன்வெல்த் செயலகம் சிறந்த நடைமுறையாக அங்கீகரித்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் பொதுச் சேவைத் தலைவர்கள் பங்கேற்ற மூன்றாவது கூட்டத்தின்போது நேற்று வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நமீபியாவின் அடையாள மேலாண்மை அமைப்பு, கென்யாவின் மனிதவள மேலாண்மை மற்றும் மின்-குடிமக்கள் மாதிரி ஆகியவை சிறந்த நடைமுறைகளாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ், மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு குறித்து விளக்கம் அளித்தார். காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி பாட்ரிசியா பேசுகையில், இந்தியாவின் அதிநவீன குறை தீர்க்கும் அமைப்பு மற்றும் நிர்வாகம் சிறந்த நடைமுறையாகும் என்று கூறினார். இந்த நடைமுறையால் இந்தியாவின் 140 கோடி மக்கள் பயனடைவதைப் போலவே காமன்வெல்த் அமைப்பின் மீதமுள்ள 120 கோடி மக்களும் தொழில்நுட்ப தளத்தின் மூலம் பயனடைய முடியும் என்று அவர் தெரிவித்தார். ‘பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்த நவீன அரசு நிர்வாகத்தை நிறுவனமயமாக்குதல்’ என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. காமன்வெல்த் அமைச்சரவை செயலாளர்கள், மூத்த அரசு அதிகாரிகள், தொழில்துறையினர் மற்றும் புகழ்பெற்ற வல்லுநர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.