விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி… மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா: பட்ஜெட்டில் அசத்தல்

சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது .அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை கீழே காண்போம்…

*வேளாண்மை தோட்டக்கலை பட்ட படிப்பு முடித்த பட்டதாரிகள், தொழில்முனைவோராக தலா 2 லட்சம் நிதி உதவி வழங்க 4 கோடி நிதி ஒதுக்கீடு

*விவசாயத்தில், ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு

*இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுக்களுக்கு 1 லட்சம் வீதம் வழங்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

*வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிக்காக, 37 மாவட்டங்களில் பணம் இல்லா பரிவர்த்தனையை விரிவுபடுத்த திட்டம்

*பல்வேறு துறைகளின் திட்டப் பலனை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில், ஒரு தளம் ஒரு பயன் திட்டம் அமல். 13-க்கும் மேற்பட்ட துறைகளின் திட்டப் பலன் இந்த இணைய தளம் மூலம் கிடைக்கும்

*உழவர் நலன்சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி நிக்ஷீணீவீஸீs (ளிஸீமீ ஷிtஷீஜீ ஷிஷீறீutவீஷீஸீ) இணையதளம் அறிமுகம்

*எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சூரிய காந்தி, நிலக்கடலை, எள், சோளப் பயிர் சாகுபடியை பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு

*எண்ணெய் வித்து விதைகள், மற்றும் உற்பத்தி கொள்முதலுக்காக, சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

*உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.ளி 3 அல்லது 4 கிராமங்களுக்கு தலா, ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்
4311 வேளாண் விரிவாக்க அலுவலர்கள் 4 கிராமங்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவர்

*விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், திட்ட பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச் செல்ல உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்

*கரும்பு டன்னுக்கு ரூ.2751 கொடுக்கப்பட்டது; சிறப்பு ஊக்கத்தொகை கூடுதலாக ரூ.195 சேர்க்கப்பட்டு வழங்கப்படும்; இதற்காக, ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு. கரும்பு கொள்முதலுக்கான சிறப்பு ஊக்கத் தொகை மூலம் 1.50 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெறுவர்

*தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி; வெங்காயம் ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு

*பேரீட்சை, அத்தி உள்ளிட்ட சிறப்பு தோட்டக் கலை பயிர்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய பயிற்சி; ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*டிராகன் ஃபுரூட், அவகேடா, லிச்சி போன்ற பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 1,000 ஹெக்டேரில் சாகுபடிக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

*ரூ. 15 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வேளாண் குடும்பங்களுக்கு பேரீட்சை, டிராகன் ஃபுரூட், அவகோடா, அத்தி பழ சாகுபடி பயிர்கள் வழங்கப்படும்.

*கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு. 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் பலா சாகுபடியை உயர்த்த இலக்கு நிர்ணயம். பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும். பலா தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்படும்.

*உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்க ரூ.30 கோடி மதிப்பில் திட்டம்.

*கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 இடங்களில், ரூ.18 கோடி நிதியில் துவரை மண்டலம் அமைக்கப்படும்.

*நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடி நிதியில் பருத்தி இயக்கம்

*பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான, தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளுக்கு விளக்க வேளாண் விஞ்ஞானிகள் திட்டம்.

*7 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு தளங்கள் சிமெண்ட் தளங்களாக அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

*சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்க ரூ.3 கோடி நிதி.

*குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க, கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

*முருங்கை ஏற்றுமதி மண்டலம் அமைத்து 1,000 ஹெக்டரில் முருங்கை சாகுபடியை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.

*கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம்.

*1,000 ஹெக்டேரில் சௌ சௌ, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியமாக ரூ.2.5 கோடி ஒதுக்கீடு.

*தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் நுண்ணீர் பாசனம் நிறுவ மானியமாக ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.

*பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையை பரவலாக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு.

*வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் பின்பற்றும் வகையில், விவசாயிகள் வெளிநாட்டில் பயிற்சி பெற ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

*வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மா, கொய்யா, பலா, சீதாப்பழம் போன்ற பழச்செடி தொகுப்புகள் வழங்கத் திட்டம்.

*ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச்செடி தொகுப்புகள் வழங்க, ரூ15 கோடி நிதி ஒதுக்கீடு.

*ஏற்காடு தாவரவியல் பூங்கா, மாதவரம் தோட்டக்கலைப் பூங்காவில், தலா ரூ.5 கோடியில், அலங்காரங்கள் அமைப்பு.

*பள்ளி மாணவ, மாணவிகளிடம் வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பண்ணை சுற்றுலா அறிமுகம்; ரூ.1 கோடி நிதி.

*உலக சந்தையில் தேனி வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் தனித்தொகுப்பு.

*வேளாண் பணிக்கான வேலை ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு அதிகரிக்கப்படும்.

*பல்வேறு வேளாண் பணிகளுக்கு பயன்படும் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.

*வேளாண் இயந்திரங்களை கிராமங்களிலேயே பழுது பார்க்க 200 ஊரக இளைஞர்களுக்கு ரூ.50 லட்சம் செலவில் பயிற்சி.

*தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உட்பட வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

*மாவட்டங்கள் தோறும் விதை திருவிழா கருத்தரங்கு, மீட்டெடுத்த விவசாயிகளுக்கு பரிசு தொகை வழங்க திட்டம்.

*வரும் ஆண்டில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த திட்டம்.

*முந்திரி சாகுபடி வரும் ஆண்டு கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்க திட்டம்.
உயர் விளைச்சல் ரக முந்திரி செடிகளை 500 ஹெக்டரில் நடவு செய்ய நடவடிக்கை

*பனை சாகுபடியை அதிகரிக்க 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
விவசாயிகளுக்கு பனை மதிப்பு கூட்ட பாதுகாப்பு உபரகணங்கள்,கொட்டகை அமைக்க நிதி உதவி.

*தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் ரூ.15 கோடியில் பனை ஆராய்ச்சி நிலையம்
பனை மேம்பாட்டுத் திட்டம்.

*பனை சாகுபடியினை ஊக்குவித்து பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

*வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்தி பராமரிக்க, ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு .

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி… மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா: பட்ஜெட்டில் அசத்தல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400