தற்போது திருப்பூரில் இன்று தொடங்கியுள்ள புத்தகத் திருவிழாவில் பங்கேற்று சட்டமேதை அம்பேத்கர் சட்ட குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கினேன்.ஸ்மார்ட் போன் , தொலைகாட்சிகளின் ஆக்ரமிப்பிற்கு பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும் அதை வாங்குவதற்காக அலைமோதுவதை காண்பதும் வியப்பாக இருக்கிறது.தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பொது நூலக இயக்ககம் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் திருப்பூர் காங்கேயம் சாலையிலுள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில், 100 க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன், 21வது புத்தக கண்காட்சி இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெறுகிறது.இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணனின் பதிவு…..இன்றைய வேகமான மற்றும் தகவல் உந்துதல் உலகில், புத்தகக் கண்காட்சிகளில் கலந்து கொள்வது இன்றியமையாத திறமையாக மாறியுள்ளது.கண்காட்சியில் கடைகள் அமைக்ககபட்டுள்ள விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் வசதியாகவும் நடப்பதற்கு எளிதாகவும் உள்ளது. பெரும்பான்மை கடைகளில் புத்தகங்களை அழகாக பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். உடன் இருந்து புத்தகங்களை எடுத்து தருகிறார்கள்.செல்போனில் பேசிக்கொண்டே புத்தகம் தேடுகிறார்கள். வலைப்பதிவு எழுதும் ஒருசிலரை காண முடிந்தது. வலைப்பதிவில் அவர்கள் எழுதும் கேலி கிண்டலான பதிவுகளுக்கும் நேரில் காண்பதற்கும் நிறைய வித்தியாசம். சபாரி சூட் அணிந்த ஒருவர் எல்லா கடைகளிலும் கவனமாக கேட்லாக் வாங்கி சேகரித்து கொண்டு தன்வேலை முடிந்துவிட்டது என்று புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேறி போய் கொண்டிருந்தார்.பொதுவாக இன்றைய இளைஞர்கள் படிப்பதில்லை என்பதை பொய்யாக்கியிருக்கிறது இந்த புத்தக கண்காட்சி. தேடித்தேடி புத்தகங்களை வாங்கும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் காணும் போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.எனவே இன்று தொடங்கி வருகின்ற 2 ம் தேதி வரை நடைபெறுகின்ற புத்தக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று அதிகளவில் புத்தகங்களை வாங்கி வாசிப்பு திறமையை அதிகப்படுத்த வேண்டும்

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





