`திருப்பரங்குன்றம் கோயில் வழிபாடு குறித்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து மதுரை கலெக்டரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களின் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்து வருகிறோம். ஆனால், ஒரு மனுவின் கோரிக்கையைக்கூட நிறைவேற்றவில்லை.மக்களின் கோரிக்கைகளை மக்கள் மன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் கொண்டு வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளாக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திமுக அரசு நிதி பெறவில்லை, தமிழகத்தின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டுப் பெறவில்லை.பிரதமர், மத்திய அமைச்சர்களை அழைத்து விழா நடத்தும் திமுக-வினர், அவர்களிடம் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டு பெறுவதில்லை. 100 நாள் வேலை திட்ட நிதியைக் கூட மத்திய அரசிடமிருந்து திமுக அரசு பெற முடியவில்லை. தமிழகத்தில் திரும்பிய திசையெங்கும் கருணாநிதி எனும் பெயரையும், அவரது சிலையையும் வைப்பதற்காக மட்டும் முதலமைச்சராக ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






