தொடரும் சதித்திட்டங்கள்!!

ஈரான் மீது குண்டுகள் விழுவதைப் பார்த்துவிட்டு,​”டிரம்ப் ஒரு பைத்தியக்காரன்”, அவர் வந்ததால்தான் போர் வந்தது என்று நம்பினால் ‘அது ஒரு மிகப்பெரிய மாயை.

​🛑 ஆனால் உண்மை என்னவென்றால்… ஈரான் மீதான போர் பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தி ஈரானின் சிறகுகளை வெட்டினார்கள்.ஈரானின் பொருளாதாரத்திற்கு முதல் பூட்டு ​பில் கிளிண்டன்….1996-களிலேயே ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை முடக்கும் ‘ILSA’ சட்டத்தைக் கொண்டு வந்தார்.வழக்கமாக ஒரு நாடு தடைகளை விதித்தால், அந்த நாட்டு நிறுவனங்கள் மட்டும் எதிரி நாட்டுடன் வணிகம் செய்யாது. ஆனால் ILSA அப்படிப்பட்டது அல்ல.”உலகில் எந்த நாடாக இருந்தாலும்.. அந்த நாடு ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் வருடத்திற்கு 20 மில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்தால், அவர்களை அமெரிக்கா தண்டிக்கும்.”
​அதாவது, “நீ என்னோடு நண்பனாக இருக்க வேண்டுமானால், நான் சொல்வதைக் கேட்டு ஈரானிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்” என்ற மிரட்டல் இது.
​​ஈரானின் மொத்தப் பொருளாதாரமும் அதன் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (Natural Gas) விற்பனையில்தான் இருக்கிறது.
​ஈரானால் சொந்தமாக உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணெயைச் சுத்திகரிக்க முடியாது. அதற்கு வெளிநாட்டு முதலீடும் தொழில்நுட்பமும் தேவை.
​ILSA சட்டத்தின் மூலம் மற்ற நாடுகள் ஈரானுக்கு உதவாமல் அமெரிக்கா தடுத்தது. இதனால் ஈரானின் எண்ணெய் கிணறுகள் துருப்பிடித்தன, புதிய திட்டங்கள் முடங்கின.இந்தச் சட்டம் இந்தியாவுக்கும் பெரிய தலைவலியாக இருந்தது.
​இந்தியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் வழியாக ஒரு எரிவாயு குழாய் திட்டம் (IPI Pipeline) கொண்டு வர முயற்சித்தது.
​ஆனால் அமெரிக்கா இந்த ILSA மற்றும் பிற தடைகளைக் காட்டி இந்தியாவை மிரட்டியது. இதன் விளைவாக, அந்தத் திட்டம் இன்றும் வெறும் காகிதத்தில்தான் இருக்கிறது.அடுத்த அமெரிக்க அதிபர் ​ஜார்ஜ் புஷ் ஈரானை “தீமையின் அச்சு” (Axis of Evil) என்று பகிரங்கமாக அறிவித்தார். ஈரானைச் சுற்றி இருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைக் கைப்பற்றி, ஈரானின் இருபுறமும் அமெரிக்க ராணுவத் தளங்களை அமைத்து ‘செக்’ வைத்தார்.உள்ளதிலேயே மிகவும் ஆபத்தானவர்​”பராக் ஒபாமா” “அமைதிக்கான நோபல் பரிசு” வாங்கிக்கொண்டே, ஈரானின் அணுசக்தி மையங்களைச் சிதைக்க ‘ஸ்டக்ஸ்நெட்’ (Stuxnet) என்ற கணினி வைரஸை ஏவினார்.

🔥முதல் டிஜிட்டல் போர்…வழக்கமான வைரஸ்கள் கணினியில் உள்ள தரவுகளைத் திருடும். ஆனால், ஸ்டக்ஸ்நெட் என்பது ஒரு மென்பொருள் மூலம் இயந்திரங்களை நேரடியாக அழிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இது ஈரானின் நடான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்தில் இருந்த யுரேனியம் சுத்திகரிப்பு இயந்திரங்களை குறிவைத்தது.
​ஈரானின் அணுசக்தி மையக் கணினிகள் இணையத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே, இந்த வைரஸை ஒரு உள்நாட்டு உளவாளி மூலம் USB டிரைவ் மூலம் ரகசியமாக உள்ளே கொண்டு சென்றார்கள்உள்ளே சென்றதும், இந்த வைரஸ் இயந்திரங்களின் வேகத்தை யாரும் கவனிக்காத வண்ணம் மிக ரகசியமாக மாற்றியது.​ஒரு கட்டத்தில் இயந்திரங்கள் தாங்க முடியாத வேகத்தில் சுழன்று, ஒன்றோடொன்று மோதி தானாகவே வெடித்துச் சிதறின.ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கட்டுப்பாட்டு அறையில் இருந்த கணினிகள் அனைத்தும் “இயந்திரங்கள் சீராக இயங்குகின்றன” என்றே காட்டியது. விஞ்ஞானிகள் கண்ணெதிரே இயந்திரங்கள் வெடித்தபோதுதான் சதி புரிந்தது…பல ஆண்டுகளுக்குப் பிறகு, இது அமெரிக்காவின் NSA மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை இணைந்து உருவாக்கிய “Operation Olympic Games” என்ற திட்டத்தின் ஒரு பகுதி என்பது அம்பலமானது.🔥ஒபாமா காலத்தில்தான் 2010-ல் ஈரானிய விஞ்ஞானிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.இப்போ ​டொனால்ட் டிரம்ப்… மற்றவர்கள் மறைமுகமாகச் செய்ததை இவர் நேரடியாகச் செய்கிறார்…அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தார், தளபதி சுலைமானியைக் கொன்றார். இவர் ஒரு ‘பைத்தியக்காரன்’ போலச் சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் இவருக்கு முன்னால் இருந்தவர்கள் வெட்டி வைத்த குழிக்குள் ஈரானைத் தள்ளும் வேலையைத்தான் இவர் செய்து கொண்டிருக்கிறார்…அடுத்து ஆயுதங்களை விடக் கொடுமையானது ‘பொருளாதாரத் தடை’ ஈரானின் எண்ணெய் வணிகத்தைத் தடுத்து, அந்நியச் செலாவணியை முடக்கி, அங்கே வறுமையைச் செயற்கையாக உருவாக்கினார்கள்..மருந்துகள் கூடக் கிடைக்காமல் மக்கள் தவிக்கும்போது, அரசாங்கத்தின் மீது மக்களுக்குக் கோபம் வரும்.இந்த வறுமையைப் பயன்படுத்தி, சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்குவது வல்லரசுகளின் தந்திரம்.ஈரானின் கை கொண்டே ஈரானின் கண்ணைக் குத்துவது.உள்ளூர் மக்களை விலைக்கு வாங்கி, அவர்களை உளவாளிகளாக மாற்றி, ரகசியங்களை வெளியே கசியவிடுவது….ஒவ்வொரு சிறகாக வெட்டப்பட்டு, இன்று ஈரான் நிலைகுலைந்து நிற்கும் வேளையில், அதை ஒரு ‘பயங்கரவாத நாடு’ என்று முத்திரை குத்தி உலக அரங்கில் தனிமைப்படுத்தி ஏதோ இன்று தான் போர ஆரம்பித்தது போலவும் நமக்கு காட்டப்படுகிறது…கிளிண்டன், புஷ், ஒபாமா என ஒவ்வொருவரும் ஈரானின் கழுத்தில் கயிறைச் சுற்றி முடித்துவிட்டார்கள.இன்று நடப்பது கயிற்றை இறுக்கும் இறுதிச் சடங்கு மட்டுமே!வல்லரசுகள் ஒருபோதும் நண்பர்களாக இருக்க முடியாது.

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதிரடி.

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர்

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய

தேர்தல் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய பத்திரிக்கையாளர் மன்றம் அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள், கோவா,

பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: 2.3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ‘வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும்’ வசதியைப் பெற்றுள்ளனர்

அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும்

தொடரும் சதித்திட்டங்கள்!!

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதிரடி.

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் : மாவட்ட எஸ்.பி

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய போராட்டமே ஈஸ்டர்

இயேசு கிறிஸ்துவின் தலைமையில்யூத அரசர்களுக்கு எதிராக எளிய மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய

தேர்தல் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்திய பத்திரிக்கையாளர் மன்றம் அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள், கோவா,

பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: 2.3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ‘வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும்’ வசதியைப் பெற்றுள்ளனர்

அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும்