மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்துநாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மெரினா
கடற்கரையில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம்
குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் அன்று (05.04.2026) நடைபெற்றதை
ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொது
தேர்தல் – 2026னையொட்டி, இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும்
பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், “உங்கள் வாக்கு உங்கள்
உரிமை” உணர்த்தும் விதமாகவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சி
மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அன்று (05.04.2026) மெரினா கடற்கரை நீலக்கொடி
கடற்கரைப் பகுதி-1ல் (மெரினா நீச்சல் குளம் அருகில்) நடைபெற்ற பறையாட்டம்,
நையாண்டி மேளம், மல்லர் கம்பம், பல்சுவை நடனம், கரோக்கி, நடனம், டிஜே
உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மேலும், மெரினா கடற்கரை நீலக்கொடி கடற்கரைப் பகுதி-2ல் (விவேகானந்தர்
இல்லம் எதிரே) நடைபெற்ற பறையாட்டம், பெரிய மேளம், கரகம், கோலாட்டம்,
நடனம், புலியாட்டம், கரோக்கி, டிஜே உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை ஏராளமான
பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்த கலை நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக
கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அன்று (05.04.2026) மாலை 5.30 மணி முதல் மூன்று மணி நேரம் மெரினாவில்
உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகளின்
மூலமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் இரட்டை வழித்தடத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது

சென்னை புறநகர் ரயில் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, ராஜபாளையம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்வு முகாம்களை நடத்துகின்றன

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால

மாண்புமிகு நீதி அரசர்களின் புதிய தீர்ப்புகள்

மோட்டார்_வாகனச்_சட்டத்தின்_கீழ்,வாகன_விபத்து_இழப்பீட்டுத்_தொகையிலிருந்து.மருத்துவக்_காப்பீட்டுத்_தொகையைக்_கழிக்க_முடியாது உச்ச_நீதிமன்றம்1988_ஆம்_ஆண்டு_மோட்டார்_வாகனச்_சட்டத்தின்_கீழ் வழங்கப்படும் இழப்பீடும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறப்படும் பணத்