அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

யாரு அடுத்த முதல்வர் …?

யாரு அடுத்த முதல்வர் …?
மிகச் சரியான ஆய்வு என்பது என் கருத்து…

விஜய் ஜெயித்துவிடுவாரா? என்று கேட்கும் அதிமுக, திமுக ஆதரவாளர்களுக்கும், விஜய் தான் ஜெயிக்க போகிறார், அடுத்த முதல்வர் என அமைச்சர்கள் பெயரையெலாம் இறுதி செய்யும் விஜய் ரசிகர் கூட்டத்திற்கும்.

விஜய் ஜெயிக்க வேண்டும் என்றால் இரண்டு திராவிட கட்சிகளில் ஒன்று அழிய வேண்டும். Decimate ஆக வேண்டும். அவர்களது core வாக்குவங்கியை இழந்து காணாமல் போக வேண்டும். அது நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை வாக்கு சதவிகிதம் அடிப்படையிலேயே பார்த்து விடுவோம்.

அதிமுகவின் core வாக்குவங்கி என்பது எப்போதும் வலிமையானது. 2021 தேர்தலில் எடப்பாடி தலைமையில் 33% எடுத்து. அதன் பிறகு சரிவுகள் என்று எடுத்துக்கொண்டாலும், 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இல்லாமல் 23% எடுத்து அதிமுக. இத்தனைக்கும் 2024 தேர்தலில் அதிமுக சரியா வேலையே செய்யா மலே வாங்கிய வாக்குகள் இது.

ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக முழுவீச்சுடன் இறங்கி வேலை பார்த்திருக்கிறது. எடப்பாடி 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார். தொண்டர்கள், தலைவர்கள் உற்சாகமாக களப்பணி செய்திருக்கிறார்கள். திமுகவுக்கு சமமாக இல்லையென்றாலும், பணத்தையும் இறங்கியிருக்கிறது அதிமுக.

அதனால் இந்த தேர்தலில் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று யாருமே நம்ப மாட்டார்கள். அதிமுகவின் core வாக்குவங்கி 23% என்றே வைத்துக்கொள்வோம். குறைவாகவே இருக்கட்டும். தேசிய ஜனநாயக கூட்டணி 2024 தேர்தலில் 18.5% வாங்கினார்கள். அதையும் குறைத்து 12% என்று வைத்துக்கொள்வோம். எப்படி பார்த்தாலும் அதிமுக கூட்டணி குறைந்தபட்சம் 35% வாக்கு வங்கியை தக்க வைக்கும் என்பது தான் நிதர்சனம். இங்கே நான் குறிப்பிட்டிருப்பது குறைந்தபட்ச பர்பாமென்ஸ். இது போக களநிலவரம், திமுக எதிர்ப்பு வாக்குகள், சாதி, மதம், பணம் என வாக்குவங்கியை தீர்மானிக்கும் காரணிகள் ஏராளம்.

அதிமுகவை விஜய் வீழ்த்த வேண்டும் என்றால் விஜய் 35%க்கு மேல் வாக்குகளை எடுக்க வேண்டும். அதிமுக + கூட்டணி 20% திற்கும் கீழே செல்ல வேண்டும். அப்படி ஒன்று நடக்குமா என்பதை அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இந்தப்பக்கம் திமுகவை வீழ்த்தி விஜய் வந்து விடுவாரா? என்றால் அதற்கும் வாய்ப்பு இல்லை.

2021-ல் திமுகவின் core வாக்கு வாங்கி 37%. கூட்டணியாக 45%. அதேசமயம் இந்த வாக்குவங்கி தொடர்ச்சியாக சரிந்து வருகிறது என்பது உண்மை. 2026-ல் திமுகவின் வாக்குவங்கி 25% ஆக சரிகிறது என்று வைத்துக்கொள்வோம். திமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து குறைந்தபட்சம் 10% எடுத்தால் கூட திமுக கூட்டணியும் 35% த்தை தொட்டுவிடும். இந்த 35% என்பது மினிமம் கியாரண்டி. இதற்கு மேல் எந்த திராவிட கட்சி அதிகமாக வாங்குகிறதோ, அந்த கட்சியே ஆட்சி அமைக்க போகிறது.

அப்படியானால் ஏதேனும் ஒரு திராவிட கட்சி கூட்டணி 40%த்தை எட்டிப்பிடித்து ஆட்சியமைக்க போகிறது. இன்னொரு திராவிட கட்சி 35%த்தை தக்க வைக்கிறது. இதுவரை வந்த கருத்துக்கணிப்புகளிலும் இதே கணக்கை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆக இரண்டு திராவிட கட்சிகள் மற்றும் கூட்டணிகள் சேர்ந்து 75% வாக்கு வங்கியை தக்க வைக்கும் என்று உறுதியாக சொல்லலாம். இதுவே குறைந்தபட்ச கணக்கு தான்.

மீதம் இருப்பது 25%. அதில் நாம் தமிழர் கட்சி 5% எடுக்கிறார் என்று வைத்து கொள்வோம். மொத்தமாக 80%. அதன் பிறகு நோட்டா, இதர வகையில் 2% என்று வைத்துக்கொண்டாலும் 82% வந்து விடும்.

சோ மீதம் உள்ள 18% தான் விஜய் கட்சிக்கு கிடைக்கும். 15% முதல் 20% வரை விஜய் எடுப்பார் என்பது தான் எனது கணிப்பும். சீட் கன்வர்ஷனுக்கும் வாய்ப்பில்லை. விஜயை தவிர வேறு யாரும் ஜெயிக்க முடியாது.

எனவே இந்த தேர்தல் இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான். ஒன்று திமுக, இன்னொன்று அதிமுக. இந்த தேர்தலின் முடிவுகளில் இருந்து தான் ஒரு திராவிட கட்சியின் சரிவு ஆரம்பமாகும். அதன் பிறகு தான் விஜய் போன்ற மூன்றாவது சக்தி களத்தை பிடிக்க முடியும். இதுதான் நிதர்சனம்.

எனவே திராவிட கட்சி, இலைக்கட்சி, பழக்கட்சி, உள்ளிட்ட கட்சிகள் டென்ஷனை குறைத்து ரிலாக்ஸ்சாக இருக்கவும். விஜய் கட்சியினர் கற்பனை உலகில் இருந்து மீண்டு வேலையை பார்க்கவும்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்