திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து
விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல் வாழ்ந்து, பிறரையும் அந்த நல்வழியில் நடக்கச் செய்யும் இல்வாழ்க்கையானது, துறவறம் மேற்கொண்டு கடுந்தவம் செய்வோரின் தவ வலிமையை விடவும் மேன்மையானது ஆகும்.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 18:19வரையுள்ள வசனங்கள் “உன் ஊற்றுக்கண்ஆசீர்வதிக்கப்படுவதாக உன் இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு, அவளே நேசிக்கப்படதக்க பெண்மானும் அழகான வரையாடும்போலிருப்பாளாக அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கி யிருப்பாயாக “என்றும், மல்கியா 2:14-15 கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார். உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ






