டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி என தேர்வர்கள் புகார்

சென்னை:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 7 மாதங்கள் காலதாமதத்திற்கு பின்னர் நேற்று வெளியிடப்பட்டன. 18 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வு எழுதி இருந்தனர். முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் சில குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக ஒட்டுமொத்தமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வரின் (overall rank – ñŸÁ‹ (communal rank-) இரண்டும் குறைந்த மதிப்பெண் பெற்றவரை காட்டிலும் குறைய வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் தரவரிசையில் அதிக மதிப்பெண் பெற்றவர் முன்னணி இடத்தை பெற முடியும். மாறாக அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்களை காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற தேர்வரின் ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் சமூக ரீதியிலான ரேங்க் குறைந்துள்ளது.
இதனால் அதிக மதிப்பெண் பெற்றவர் தரவரிசையில் பின்னணியிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர் தரவரிசையில் முன்னணி இடம் பிடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மதிப்பீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே இது நிகழ்ந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் தேர்வர்களின் பதிவெண்ணுடன் உடன் கூடிய தரவரிசை பட்டியலை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு வந்தது. கடந்த 2019-ல் குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பதிவெண் உடன் கூடிய தரவரிசை பட்டியலை வெளியிடுவதையும் அரசு பணியாளர் தேர்வாணையம் நிறுத்தியுள்ளது. இது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புவதாகவும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடியவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை