தோல், காலணி தொழில்துறை வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம், தோல் ஏற்றுமதி கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய ’12 ஆண்டுகால சாதனைகள்: வர்த்தகம், தொழில்துறை வளர்ச்சி, செழிப்பு, தோல், காலணிகள், உதிரிபாகங்கள் – தொழில்துறையினருக்கான கலந்துரையாடல் கூட்டம்’ சென்னையில் 08 ஜூன் 2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தோல், காலணி தொழில்துறையின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.  மத்திய வர்த்தக அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பெட்டல் தில்லான் கலந்து கொண்டு ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து விரிவாக விளக்கினார்.

பல்வேறு நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்கள், ஏற்றுமதியாளர்களுக்கான இணையதளம், வர்த்தக நுண்ணறிவு பகுப்பாய்வு இணையதளம், ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை குறித்து அவர் குறிப்பிட்டார். வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் தோல், காலணித் துறைக்கு வழங்கப்பட்டுள்ள பூஜ்ஜிய சதவீத வரிச் சலுகையின் நன்மைகளை அவர் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறியீடு 24 மணி நேரமும் உருவாக்கும் வசதி, வணிக நடவடிக்கைகளை எளிதாக்கும் மொபைல் செயலி போன்ற அரசின் டிஜிட்டல் முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார். 

தொழில் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளான எளிமைப்படுத்தப்பட்ட 47 நடைமுறைகள், தானியங்கி கட்டண முறைகள், விரைவான செயலாக்கத்திற்கான இணையதள-பிஆர்சி தொகுதி மேம்பாடுகள், சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் கியூஆர் குறியீடு முறை ஆகிய நடைமுறைகள் குறித்தும் பெட்டல் தில்லான் எடுத்துரைத்தார்.ஏற்றுமதி தயாரிப்புகள் மீதான வரிகள், தீர்வைகளுக்கு விலக்கு அளிக்கும் திட்டம், ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சித் திட்டம் போன்ற சலுகைகளையும் அவர் விளக்கினார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அனைத்து பங்குதாரர்களின் உள்ளடக்கிய அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார். மத்திய தொழில்துறை மேம்பாடு, உள்நாட்டு வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் நிதி கேசர்வானி பேசுகையில், நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டு வரும் பல்வேறு தொழில்துறை பூங்காக்கள் பற்றி குறிப்பிட்டார். ராணிப்பேட்டையில் அமையவுள்ள திடக் கழிவு மேலாண்மைத் திட்டம், காலணித் துறை தொகுப்புகளின் (கிளஸ்டர்) வளர்ச்சி ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.  தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் துணைத் தலைவர் முக்தாருல் அமீன், நிறைவுற்ற தோல் இறக்குமதிக்கான வரி விலக்கு, ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரிச் சலுகையை தோல் பொருட்கள் மற்றும் காலணி தயாரிப்பு பிரிவுகளுக்கும் நீட்டிப்பது குறித்த கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தார். முன்னதாக, தோல் ஏற்றுமதி கவுன்சில் முன்னாள் தலைவர் பனாருனா அகீல் வரவேற்புரையாற்றினார். கவுன்சிலின் தென் மண்டல தலைவர் எம். அப்துல் வஹாப் நன்றியுரை ஆற்றினார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச