சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம். பள்ளி மாணவன் இறந்த சோகம் நேற்ற முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் பிடி பயிற்சியாளர் இடம் போலீசார் விசாரணைசென்னை தி.நகர் காந்திபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (43) இவரது மனைவி தரங்கினி(38) இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. மூத்த மகன் சஜேஷ் (19) மகள் சுமித்தா (18) மூன்றாவது மகன் சர்வேஸ் (எ) சரண் (16) என்றும் மூன்றாவது மகன் சர்வேஷ் தி.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவதாகவும் இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சர்வேஷ் பள்ளிக்கு சென்றதாகவும் மாலை 3:30 மணி அளவில் விளையாட்டு நேரம் என்பதால் அப்போது சக மாணவர்கள் கால்பந்து விளையாடிய போது திடீர் என்று மயங்கியபோது சக ஊழியர்கள் மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அப்போது மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து பள்ளி நிர்வாகம் மாணவன் இறந்து போனதை தகவல் கூறமால் பள்ளியின் ஊழியர்களை கொண்டு பெற்றோர்களுக்கு தகவல் கூறியதாக கூறப் படுகிறது. உடனே பள்ளி நிர்வாகம் மாம்பலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தனியார் மருத்துவமனையில் இருந்து மாணவனின் உடலை மீட்டு பிதே பிரி சோதனைக்காக சென்னை கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்துபோன பள்ளி மாணவனின் தாயார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறியதாவது எனது மூன்றாவது மகன் சர்வேஷ் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிய போது மயங்கி விழுந்ததாகவும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும் பள்ளியின் நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனது மகன் இறந்த உடன் பள்ளி நிர்வாகம் எங்களிடம் தகவல் சொல்லவில்லை அதனால் என் மகன் இறந்துபோன காரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார் இது குறித்து இறந்துபோன பள்ளி மாணவனின் தாய்மாமன் கார்த்திக் கூறுகையில் பள்ளி மாணவன் கால்பந்து விளையாடி மயங்கிய நிலையில் பள்ளியின் உடற்பயிற்சியாளர் ராஜி என்பவர் உடன் இல்லை சக மாணவர்கள் மட்டும் ஒடி வந்து மாணவனுக்கு தண்ணீர் கொடுத்து தூக்கிவிடும் காட்சி சி.சி டிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. அதே போல் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மாணவனின் உடலை வாங்க போவதில்லை என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் போலீசார் மாணவன் இறந்து போன நேரத்தில் பயிற்சியாளர் எங்கு சென்றார் என்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.









