2025-26 நிதியாண்டில், வேளாண்மை, கைவினைப்பொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் தமிழ்நாட்டின் 5 பாரம்பரியப் பொருட்கள் புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பொருட்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவற்றின் சந்தைப்படுத்தல் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவை: கைவினைப்பொருட்கள் பிரிவின் கீழ் அம்பாசமுத்திரம் சொப்பு சாமான் (மர பொம்மைகள்), உறையூர் பருத்திச் சேலை, நாமக்கல் மாக்கல் பாத்திரங்கள்; வேளாண்மைப் பிரிவின் கீழ் தூயமல்லி அரிசி; உணவுப் பொருட்கள் பிரிவின் கீழ் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை. இந்தப் புவிசார்க் குறியீட்டு முத்திரையானது, அதன் நம்பகத்தன்மைக்கான ஓர் முத்திரையாகச் செயல்பட்டு, உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என இருவருக்கும் பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியான நன்மைகளை வழங்கும்.நபார்டு, பல்வேறு முகமைகளுடன் இணைந்து, பலதரப்பட்ட பொருட்களைக் கண்டறிந்து புவிசார் குறியீட்டுப் பதிவேட்டில் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டில் புவிசார் குறியீட்டுடன் இணைந்த மதிப்புத் தொடர்களின் நிலைத்தன்மையையும், உற்பத்தியாளர்களுக்குச் சிறந்த விலை கிடைப்பதையும் உறுதி செய்கிறது.புவிசார் குறியீடு முத்திரையிடப்பட்ட பொருட்கள், அவற்றின் நம்பகத்தன்மையையும் தனித்துவமான பிராந்திய அடையாளத்தையும் உணர்த்துவதோடு, பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதோடு, நுகர்வோருக்குத் தரம் மற்றும் உற்பத்தியின் மூலத்தையும் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டில், மதுரை மல்லி, மதுரை மரக்கொழுந்து , பண்ருட்டி பலாப்பழம் மற்றும் புளியங்குடி எலுமிச்சை போன்ற பொருட்கள், மாநிலத்தின் வளமான புவியியல் குறியீட்டுச் சூழலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். புவியியல் குறியீட்டுப் பதிவு, உயர் விலை நிர்ணயம் செய்ய உதவுவதன் மூலமும், போலிகளைத் தடுப்பதன் மூலமும், சந்தை நம்பிக்கையையும் போட்டித்தன்மையையும் வலுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கிறது.வேளாண்மை, உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற துறைகளை உள்ளடக்கிய, புவிசார் குறியீடு சான்றளிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். மாநிலத்தில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், கொல்லிமலை மிளகு, ராமநாதபுரம் பூங்கார் அரிசி, காஞ்சிபுரம் இட்லி, கருங்காணி பருத்தி, கோவில்பட்டி சீவல், ஆத்தூர் பூவன் வாழைப்பழம், தூத்துக்குடி உப்பு, வில்லிசேரி எலுமிச்சை, வடக்காடு பலாப்பழம் உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் வலுவான தொடர் உற்பத்தியை எளிதாக்கியுள்ளது.இந்த முயற்சிகள், கிராமப்புறப் பொருளாதார மாற்றத்திற்கும், தமிழ்நாட்டின் தனித்துவமான தயாரிப்புகளை தேசிய அளவிலும் உலக அளவிலும் பிரபலப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பு, இதர மாநிலங்களில் புவிசார் குறியீட்டை ஊக்குவிப்பதற்கான பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாகச் செயல்படுவதோடு, கிராமப்புற வளர்ச்சி, பண்பாட்டுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள், கைவினைஞர்களின் வருவாய் மேம்பாட்டிற்கும் கணிசமாகப் பங்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகவியலாளர்கள் மக்கள் நலத் திட்டங்கள் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டுமென பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் பழனிச்சாமி அறிவுறுத்தல்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் சேலத்தில் இன்று 16 ஜூன்






