தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை அங்கீகார விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கும் விண்ணப்பங்களை ஏற்கும் நடைமுறையைத் தொலைத்தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் பிரிவு 3-ன் உட்பிரிவு (1)-ன் பிரிவு (அ)-வின் கீழ், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரம் தொடர்பான விதிகள் ஜூன் 23, 2026 அன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ், உரிமத்தை அங்கீகார விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு மாற்றுவது தொடர்பான விதிகளும் ஜூன் 23, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன.தொலைத்தொடர்புச் சட்டத்தில் திட்டமிடப்பட்டவாறு, மேற்கூறிய விதிகளின் அம்சங்கள் டிஜிட்டல் வடிவமைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இதை எளிதாக்கும் வகையில், புதிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், தற்போதுள்ள உரிமங்களை மாற்றுவதற்கும் தேவையான விண்ணப்பப் படிவங்கள், செயல்முறைகள் இணையதளத்தில் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






