மின்துறை அமைச்சர் பேச்சுக்கு டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் எதிர்ப்பு
ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவு விபரங்கள் பட்டியல்கள் காணாமல் போய்விட்டதா…..?
ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்து தவறான புரிதலின் காரணமாக பேசியதை திரும்ப பெறவும் வலியுறுத்தல்
மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய முதல்வருக்கு கோரிக்கை
இது தொடர்பாக பேச்சுக்கு டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் முதல்வருக்கும், எரிசக்தி துறை செயலருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்….
மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற நிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகக்கிய நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவே நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய முதல்வர் உரிய வேண்டும்.
மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற நிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை மட்டுமே வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கினர்.
குறிப்பாக வர்தா புயல், கஜா புயல், தானே புயல் போன்ற பேரிடர் காலங்களில், உயிரை துச்சமாக நினைத்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க, ஒப்பந்த தொழிலாளர்கள் அயராது உழைத்து அரசு வழங்கிய குறைந்த ஊதியத்தால், குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் பேரிடர் காலங்களில், பணிகளை முழுமையாக முடித்துவுடன் பணிநிரந்தரம் வழங்கப்படும் என ஆசை வார்த்தைகூறி அப்பாவி ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை திருடியுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகும்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தொழிலாளர் ஆய்வாளரிடமும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து பணிநியமன ஆணை பெற்றனர்.
ஆனால் உத்தரவுக்கு எதிராக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணி நிரந்தர ஆணைகள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஏற்கெனவே கடந்த 20 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு புதிய ஆட்சியில் பணிநியமனம் கிடைக்கும் என்றிருந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், மின் துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறையை தீர்க்க இந்த ஆண்டு 15,000 பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்ய உள்ளதாகவும், “இந்தாண்டு 15 ஆயிரம் பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பணியாளர்களை தேர்வு செய்து அளிப்பதற்கான கடிதம் டி.என்.பி.எஸ்.சிக்கு அனுப்பப்படும். அதுவரை அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கபடுவார்கள்” எனவும்
முந்தைய ஆட்சிக் காலங்களில் பல தவறுகள் நடந்துள்ளன. மின்வாரியத்தில் 1.40 லட்சம் பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். ஒருவர் இரண்டு பேருக்கான வேலையைச் செய்து வருகிறார். ஒட்டுமொத்தமாக 70 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், முதற்கட்டமாக இந்த ஆண்டுக்குள் 15,000 பேர் வேலைக்கு எடுக்கப்படுவார்கள். ஆட்சேர்ப்பின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் நிரந்தர அரசு ஊழியர்கள் பதவியாக இருக்கும் என்றும் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் கிடையாது” எனவும் கூறியுள்ளது அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்து தவறான புரிதலின் காரணமாக பேசியதை திரும்ப பெற வேண்டும்.
குறிப்பாக ஏற்கெனவே ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து பணிநியமன ஆணை பெற்றுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் விபரங்கள் பட்டியல்கள் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருக்கும் நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்து தவறான புரிதலின் காரணமாக பேசியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அப்படி என்றால் ஒப்பந்த தொழிலாளர்கள் நீதிமன்ற உத்தரவு விபரங்கள் பட்டியல்கள் காணாமல் போய்விட்டதா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளன.எனவே உடனடியாக இது தொடர்பாக முதல்வர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி மின்வாரியத்திலுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய விரைவாக தீர்வுகாண டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.







