மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற
நிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகக்கிய நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவே நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய முதல்வர் உரிய வேண்டுவது சம்பந்தமாக…
வணக்கம்…..
மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்ற நிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை மட்டுமே வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கினர்.
குறிப்பாக வர்தா புயல், கஜா புயல், தானே புயல் போன்ற பேரிடர் காலங்களில், உயிரை துச்சமாக நினைத்து, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க, ஒப்பந்த தொழிலாளர்கள் அயராது உழைத்து அரசு வழங்கிய குறைந்த ஊதியத்தால், குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் பேரிடர் காலங்களில், பணிகளை முழுமையாக முடித்துவுடன் பணிநிரந்தரம் வழங்கப்படும் என ஆசை வார்த்தைகூறி அப்பாவி ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பை திருடியுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 86:இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன் குறள் விளக்கம்: விருந்தின்






