கீரைகள் தினம் இன்று: “நோயற்ற வாழ்வளிக்கும் கீரைகள்”

இன்று உலக கீரைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்நாளில் கீரைகள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பவை பற்றி கீழே காண்போம்:
இந்தியாவில் எண்ணற்ற கீரை வகைகள் உள்ளன. அவற்றில் நாம் சிலவற்றை உணவுக்காக பயன்படுத்துகிறோம். மருந்தாகவும் பயன்படுத்துகிறோம். அறக்கீரை, பாலக் கீரை தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை மற்றும் புதினா தழை ஆகியவை பெருமளவில் முக்கியத்துவம் வாயந்தவை.
கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 30000 சிறு பிள்ளைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது. கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது. கீரைகள் பி-காம்ளக்ஸ் வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
நாம் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் சில கீரை வகைகளின் மருத்துவ குணங்களை இங்கே காணலாம். இவற்றை அறிந்துகொண்டால் மட்டும் போதாது. கீரைகளை உணவுடன் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறும். இதோ அவை…
அகத்திக்கீரை – ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை – சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை – சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை – தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை – வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை – கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை – ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை – சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை – வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை – பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை – உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை – இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை – இரத்தசோகையை நீக்கும்.
முரங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை – மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை – கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை – இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை – விஷம் முறிக்கும்.
தும்பைகீரை – அசதி, சோம்பல் நீக்கும்.
முருங்கைகீரை – சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை – நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை – பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்சகீரை – கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை – வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை – வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை – தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை – மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை – ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை – இருமலை போக்கும்.
சாணக்கீரை – காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை – தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை – பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை – பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை – வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை – மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை – சளியை அகற்றும்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

கீரைகள் தினம் இன்று: “நோயற்ற வாழ்வளிக்கும் கீரைகள்”

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400