தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் பிரதான இணைப்புச் சங்கமாக திகழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்- ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்கள்.
சங்க நிர்வாகிகளை திட்டமிட்டு பணியிடமாறுதல் செய்த பிற்படுத்தப்பட்டோர் இயக்குனர் அவர்களையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வன்மையாக
கண்டிக்கிறது..
ஒரு துறையில் பணியிட மாறுதல் என்பது மூன்று ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து கொண்டிருக்கின்ற அலுவலர்களை முதுநிலை அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வு வாய்ப்பு கொடுத்து அதில், விருப்பமான இடத்தில் அல்லது காலி இருக்கும் இடத்தில் அல்லது உடல் ஊனமுற்றோர், துணைவர் கோட்டா, உடல் நலம் பாதித்தவர் கோட்டா எந்த வழிமுறைகளை பின்பற்றி முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டியது என்பது விதியாகும்.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தன்னிச்சையாக குறிப்பிட்ட அலுவலர்களை அதுவும் சங்க நிர்வாகிகளை திட்டமிட்டு பணியிடமாறுதல் செய்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
கடந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மாற்றாக சமூக நீதி நேர்மை என்று வாக்குறுதி கொடுத்து வந்த இந்த தமிழக வெற்றிக்கழக அரசு சமூக நீதி அரசாக செயல்படும் என்று அனைத்து அரசு அலுவலர்களும் நம்பிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், ஆளுகின்ற அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருக்கின்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அரசு உடனடியாக பணியிடமாறுதல் செய்து இது போன்ற தேவையற்ற உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிலை தொடர்ந்தால் துறை சார்ந்த உறுப்பினர்களில் நிர்வாகிகள் என்ன ஓட்டத்தை அறிந்து இத்துறை அதிகாரிகளுக்கு எதிரான போராட்டங்கள் களத்தில் வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்கப் பணியில்
V மகேந்திரகுமார்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்






