
பட்ஜெட் கூட்டத் தொடர் அல்லது சுதந்திர தின உரையில் எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிக்கை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவரும், அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளருமான மகேந்திர குமார் முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டை ஆளுகின்ற தமிழக வெற்றிக்கழக அரசின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின்படி 1.4.2003 பணியில் சேர்ந்து 31.12. 2025 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற 60,000 மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்போடு உள்ள அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
சிறப்பு கால முறை ஊதியம் மற்றும் தொகுப்பூரியத்தில் பணிபுரியும் அங்கன்வாடி, சத்துணவு, ஊர் புற நூலகர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், கிராம உதவியாளர்கள், டாஸ்மார்க் பணியாளர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் என்.எச்.எம். பணியாளர்கள் தாய்&சேய் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஏவலர்கள், காவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியமும், 10 ஆண்டுகள் தினக்கூலியாக பணியாற்றும் பணியாளர்களுக்கு நிரந்தர பணிடமும், புற ஆதார முறையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை தொகுப்பூதிய மற்றும் சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களாகவும் அறிவித்திட வேண்டும்,
மத்திய அரசு 01.01.2026 முதல் 8 வது ஊதிய குழு செயல்படும் என அறிவித்து அதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துள்ள நிலையில், மாநில அரசு 8 வது ஊதிய குழு தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியிடாத நிலையில், எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிக்கைகளை வெளியிட வேண்டும், இந்த பிரதான கோரிக்கைகளை வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது சுதந்திர தின உரையிலோ முழுமையாக வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ்நாட்டில் பணி புரியும் 12 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களும் எதிர்நோக்கி உள்ளனர். இதை முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது






