சபாநாயகருடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றய மாநிலத் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய TNGOU மாநிலத் தலைவர் மகேந்திரகுமார் சந்தித்தார். இச்சந்திப்பில் சட்டப்பேரவை தலைவர் வாயிலாக முதலமைச்சருக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றவுடன் இரண்டு சதவீதம் அகவிலைப்படி உயர்வு, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இடைக்கால நிவாரண விதிமுறைகள், டாஸ்மார்க் பணியாளர்களுக்கு 25% ஊதிய உயர்வு, சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிய அரசாணை வெளியிட்டது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் சிறப்பாக சட்டமன்றத் தேர்தலை நடத்தும் சபாநாயகருக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.
கோரிக்கைகள் விவரம் வருமாறு:

  1. அனைத்து துறைகளிலும் சிக்கன செலவின கமிட்டி மூலம் குறைக்கப்பட்ட காலிப் பணியிடங்களை மீண்டும் விடுவித்து முழுமையான காலிப் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.
  2. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
  3. தினக்கூலி அத்துக்கூலி புற ஆதார முறையில் உள்ள பணியாளர்களை தொகுப்பூதிய பணியாளர்களாகவும், தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியத்திலும் அரசு பணி அமர்த்த வேண்டும்.
  4. அம்மா உணவகப் பணியாளர்கள் போல பணிபுரியும் பல்வேறு நிலையில் உள்ள பணியாளர்களுக்கு அனைத்து தினக்கூலி பணியாளர்களையும் ஒரே விதமாக சரிசமமாக இருக்கும் சம்பள விகிதத்தில் பணியமர்த்த வேண்டும்.
  5. மாநில அரசு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைத்து நிலை பணியாளர்களின் காவலராக திகழ்ந்த தானைத் தலைவர் சிவ இளங்கோ அவர்களுக்கு மணிமண்டபமும் முழு உருவச் சிலையும் அமைத்து தர வேண்டும்.
  6. தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அனைத்து நிலை அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கும் 8 வது ஊதிய குழுவை உடனடியாக வருகின்ற சட்டப் பேரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டு நிறைவேற்றித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வழங்கப்பட்டதுடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நாட் குறிப்பேடும் வழங்கப்பட்டது
    இந்நிகழ்வில் ஒன்றியத்தின் துணைத் தலைவர் பிஜே ரவிக்குமார், இணைப்புச் சங்கத் தலைவர்கள் தங்கத்துரை, மாரிமுத்து, அன்பழகன், இணைப்புச் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், நஞ்சையன், பழ.சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்‘ அப்பொழுது அனைவருக்கும் மாண்புமிகு சபாநாயகர் வாழ்த்து தெரிவித்ததுடன் சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை முதலமைச்சர் வாயிலாக நிறைவேற்றதற்கு பரிந்துரைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

சபாநாயகருடன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றய மாநிலத் தலைவர் சந்திப்பு

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)