செங்கல்பட்டு:
தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து, கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், ஜூன் 15ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றும் இருவரும் ஆஜராகாத நிலையில், இருவரும் பிரபலங்கள் என்பதால் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் இணையதள முகவரி சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை நடந்தது.
முதலில் சங்கீதாவிடம் காணொளி காட்சி மூலமாக விசாரணை துவங்கியது. நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட நிலையில் சங்கீதாவிடம் காணொளி காட்சி மூலமாக விசாரணை நடந்தது. முதலில் சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
முதலமைச்சர் விஜய் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்றாலும் சிறிது நேரத்தில் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு முதலாவதாக சங்கீதாவிடம் விசாரணை நடந்தது.
காணொளி காட்சி மூலமாக லண்டனில் இருந்து சங்கீதா ஆஜரான நிலையில் சுமார் 20 நிமிடங்கள் நீதிபதியிடம் தனது வாதங்களை முன்வைத்துள்ளார். அடுத்த விசாரணைக்கான தேதி இன்று மாலை தெரிவிக்கப்படும் என நீதிபதி கூறியதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் நிறைவேறியது யுபிஐ மசோதா: யாருக்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும்? –
புதுடெல்லி:எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்,






