சென்னை:
தமிழ்நாட்டில் பிஇ, பிடெக் படிப்புகளுக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வில் 60,508 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வரும் 13ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியிலோ அல்லது உதவி மையத்திலோ சேர்ந்து கொள்ள வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பிஇ ,பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வின் 2-ஆம் சுற்று, ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பொது பிரிவில் தரவரிசையில் 37,977 முதல் 1,31,093 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அரசு பள்ளி தரவரிசை பட்டியலில், 2,571 முதல் 18,036 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 93,116 மாணவர்களில், விரும்பும் கல்லூரியை பதிவு செய்த 68,388 இடங்கள், அரசுப் பள்ளிகளை சேர்ந்த 15,466 மாணவர்களில், 11,015 இடங்கள் என 79,403 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழுவின் தலைவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கால அட்டவணையின் இரண்டாம் சுற்றின் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகஸ்ட் 8-ஆம் தேதியுடன் முடிவுற்றது. தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்ட 40,299 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டு ஆணைகளும், தங்களுக்கு கிடைத்துள்ள இடத்தை ஏற்றுக்கொண்டு மேல்நோக்கிய நகர்வுக்கு உறுதி செய்த 10,648 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அரசு பள்ளியில் பயின்ற 6,914 மாணவர்களுக்கு நிரந்தர ஒதுக்கீட்டு ஆணைகளும், 2,647 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும் சேர்த்து மொத்தமாக 60,508 ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்கள் விருப்பத் தேர்வில் குறிப்பிட்டுள்ள மையத்திற்கும், இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரியிலும் நேரில் சென்று ஆகஸ்ட் 13 வரை அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்விக் கட்டணத்தை செலுத்தி சேர்க்கை பெறவேண்டும்.
ஆகஸ்ட் 13க்குள் உதவி மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்காத மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தானாகவே ரத்து செய்யப்படும். அவ்விடங்கள் அதே சுற்றில் மேல்நோக்கிய நகர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில், 28,979 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றனர். பி.ஆர்க் கலந்தாய்வில் பொது பிரிவில் 622 மாணவர்களும், அரசு பள்ளியில் பயின்ற 7.5 சதவித ஒதுக்கீட்டில் 40 மாணவர்களும் ஒதுக்கீட்டாணைகள் வழங்கப்பட்டு சேர்க்கை பெற்று வருகின்றனர்.
பிஇ, பிடெக், பிஆர்க் துணைக் கலந்தாய்வுக்கு, 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் பொதுக் கலந்தாய்வில் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியில் வெளியிடப்பட்டு, துணைக்கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய இசையமைப்பாளத் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன்
சென்னை:கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில்






