தமிழ்நாட்டிலா இப்படி? அதிசயம்… ஆனால் உண்மை! திருமணமாகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதமாம்

வேளாங்கண்ணி:
போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று தமிழக முதல்வர் கூறி வருகிறார். இதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர். மது ஒழிப்பு பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தமிழ்நாடு மதுவால் தத்தளித்து வருகிறது.
ஆனால் மதுவுக்கு எதிராக ஒரு கிராமத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதைப்பற்றி பார்ப்போம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில், “பொதுமக்கள் கவனத்திற்கு… நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சினைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.
இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்… ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் பரவி வரும் நிலையில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழக அரசு சார்பில் இந்த கிராமத்துக்கு “மது ஒழிப்பில் சிறந்த கிராமம்“ என்கிற விருது வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.