இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது: ஒரே நாளில் 5 பேர் பலி

புதுடெல்லி:
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியது. ஒரே நாளில் இதன் பாதிப்பில் ஈடுபட்டுள்ள 5 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3,000-ஐ தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் நேற்று 3,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,509லிருந்து 15,208ஆக உயர்ந்துள்ளது. இது 0.03 சதவீதமாகும். கொரோனாவில் இருந்து நேற்று 1,396 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1,390 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,41,69,711 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
ஆகவே தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம் ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,30,867 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு 1.19% பேர் பலி ஆகி உள்ளனர். நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220,65,99,034 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 6,553 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.