மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம்

புதுச்சேரி:
மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கேட்டு 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை அதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியது. அப்பொழுது முதல் தனி உறுப்பினர்கள் தீர்மானங்களாக பல்வேறு கட்சிகள் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை முன்வைத்து தீர்மானம் கொண்டு வந்தனர். புதுச்சேரி மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதை அரசு தீர்மானமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் இது தொடர்பாக அனைத்தும் உறுப்பினர்களும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி நபர் தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக உறுப்பினர்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்துக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்ககோரிய தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்