கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் தயார் நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கெரோனா தொற்று முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் வந்து பயம் காட்டி வருகிறது. அதேபோல் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த (30.03.2023) ஒரே நாளில் இந்தியாவில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு இது அதிகமாகும். இதேபோல் நேற்று முன் தினம் ஒரே நாளில் இந்தியாவில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு