அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 21 திருக்கோயில்களில் ரூ.149.93 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.149 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 21 திருக்கோயில்களில் ராஜகோபுரங்கள், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சுற்றுச்சுவர் கட்டுதல், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, அமாவாசை மண்டபம், பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை, மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம், தார் சாலை, பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் போன்ற 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறை மூலம் 620-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் 38.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் 7.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் 3.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, சேலம் மாவட்டம், சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;
நாமக்கல் மாவட்டம், எஸ்.பழையபாளையம், அங்காளம்மன் திருக்கோயிலில் 1.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி, ஈரோடு மாவட்டம், பண்ணாரி, பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் 13.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது நிலை ராஜகோபுரம் மற்றும் கிரில்களுடன் கூடிய சுற்றுச்சுவர் கட்டும் பணி, கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் 2.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிகாணிக்கை மண்டபம் கட்டும் பணி, தேனி மாவட்டம், வீரபாண்டி, கௌமாரியம்மன் திருக்கோயிலில் 4.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, தேவதானம்பட்டி, அருள்மிகு மூங்கிலனை காமாட்சியம்மன் திருக்கோயிலில் 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், மாரியம்மன் திருக்கோயிலில் 3.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமாவாசை மண்டபம் கட்டும் பணி, ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை கட்டும் பணி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, திருவாரூர் மாவட்டம், குடவாசல், கோணேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஊத்துக்காடு, கைலாசநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணி, மன்னார்குடி, அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, பூவநாத சுவாமி திருக்கோயிலில் 2.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோயிலில் 5.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழுநிலை இராஜ கோபுரம் கட்டும் பணி, மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 5.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச் சீட்டு வழங்குமிடம் ஆகியவற்றை கட்டும் பணி மற்றும் 3.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை சீரமைக்கும் பணி;
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 40.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் பணியாளர்கள் நிர்வாக பயிற்சி மையம் கட்டும் பணி, மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்தும் பணி, சென்னை, உத்தண்டி, அருள்மிகு பிடாரி அகிலாண்டம்மன் திருக்கோயிலில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி;

என மொத்தம் 149.93 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திருக்கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை சிறப்பு பணி அலுவலர்ஜெ.குமரகுருபரன், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் க.வீ.முரளீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, வடபழனியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. அமிர்த ஜோதி, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ், பண்ணாரியிலிருந்து ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹச். கிருஷ்ணனுண்ணி, சேலத்திலிருந்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. கார்மேகம், சமயபுரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மருதமலையிலிருந்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 29 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர