மதுராந்தகம்:
அச்சரப்பாக்கம் அடுத்த மதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகு (வயது 24).அதே கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இருவரும் வெங்கடேசபுரம் ரெயில்வே கேட் அருகே அச்சரப்பாக்கம் நோக்கி வரும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகாத வார்த்தையால் பேசி வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது, பணிக்கு வந்து கொண்டிருந்த அச்சரப்பாக்கம் போலீஸ்காரர் கார்த்திக், பொதுமக்களிடம் தகராறு செய்யாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மது போதையில் இருந்த சூர்யா போலீஸ்காரர் கார்த்திக்கை தகாத வார்த்தைகளாள் திட்டியுள்ளார். தொடர்ந்து போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியும் உள்ளார். இதை கண்ட பொதுமக்கள் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக்கை தாக்கிய சூர்யாவை கைது செய்தனர்.