ஐபிஎல் திருவிழா: 23 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு அணி

பெங்களூரு:
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 2 போட்டிகளில் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் குவித்த நிலையில் டு பிளிஸ்சிஸ் 22 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து களம் இறங்கிய லோம்ரார் 26 ரன், மேக்ஸ்வெல் 24 ரன், ஹர்ஷல் படேல் 6 ரன், தினேஷ் கார்த்திக் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதற்கிடையில் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பிரித்வி ஷா இம்பேக் பிளேயராக களம் இறங்கினார். பிரித்வி ஷா மற்றும் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இதில் ஷா 0 ரன், அடுத்து வந்த மார்ஷ் 0 ரன், யாஷ் துல் 1 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து வார்னருடன் மனிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் வார்னர் 19 ரன்னிலும், அடுத்து வந்த அபிஷேக் 5 ரன், அக்சர் படேல் 21 ரன் லலித் யாதவ் 4 ரன் எடுத்த நிலையிலும், மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டே 50 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி இன்னும் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு