1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
சிறைக்காக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. – குறள் : 57
மேற்கண்டவாறு அல்லாமல் கணவன் சிறைச்சாலையுள் அடைத்து வைத்துக் காப்பது போல் மனைவியைக் காவல் காப்பது என்ன பயனைத் தரும். (மனைவியே தன்னைக் காத்துக்கொள்ளல் வேண்டும்). (முன் இணைப்பில் காண்க).






