ஏதென்சில் இருந்து தெசலோனிகிக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அதேபோல் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இரு ரயில்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. இதில் ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று தடம் புரண்டு தீ பற்றியது.
இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.