செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் தையூர் கிராமம் கோமான் நகர் சுமைதாங்கி ரோடு பெயர்ப் பலகையில் அரிசன காலணி என்று பதிவிட்டு இருந்ததை அகற்றிட அபயம் என வழங்கும் பாசறையின் மாநில இளைஞர் அணி செயலாளர் I.A.எழிலரசு நமது தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை மாவட்ட நிருபர் இரா. மு. அருண்குமார் கவனத்திற்குக் கொண்டு வந்ததின்படி சம்மந்தப்பட்ட அதிகாரியை 31/5/2023 அன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த தகவல் தாங்கள் சொல்லித்தான் அறிகிறோம் ஆகையால் தாங்கள் சொல்வது உண்மை என பட்சத்தில் உடனடியாக ஆய்வு செய்து அப்பெயரினை அகற்றிடச் செய்கிறோம் என்று கூறினர். உடனே பெயர்ப் பலகையிலிருந்த ஹரிஜன காலணி பெயர்மீது மஞ்சள் வண்ணத்தில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுவிட்டது என்கின்ற தகவல் கிடைத்திடத் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் கோரிக்கை மற்றும் அபயம் என வழங்கும் பாசறையின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திருப்போரூர் ஒன்றிய திட்ட அலுவலக அதிகாரி அவர்களுக்குத் மாவட்ட நிருபர் இரா மு அருண்குமார் நன்றி தெரிவித்தார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





