பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   விடுமுறை முடிந்து  மீண்டும் பள்ளிகள் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தொடர்ந்து  கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.  

இந்நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் என்னும் குறையாததால் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். வெயிலின்  காரணத்தினால் பள்ளிகளை திறப்பது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பள்ளி திறப்பை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும்  பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. சில மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவை  அமைச்ச விரைவில் மேற்கொள்வார் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச