மும்பை மின்சார ரெயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் ஒருவன் கைது….

மும்பையில் உள்ள கிர்காவ் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண் ஒருவர், நவிமும்பையில் உள்ள பேலாப்பூருக்கு நேற்று தேர்வு எழுத சென்றார். இதற்காக அவர் காலை 7.30 மணி அளவில் சி.எஸ்.எம்.டி. பகுதியில் ஹார்பர் லைனில் இருந்து செல்லும் மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறினார். அந்த பெட்டியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை என தெரிகிறது. அந்த ரெயில் மெதுவாக நகர தொடங்கியபோது, திடீரென 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ஒருவர் அந்த பெட்டிக்குள் ஏறினார். அவர் பெண்கள் பெட்டியில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மஸ்ஜித் பந்தர் ரெயில் நிலையம் வந்தபோது உதவிக்கேட்டு சத்தம்போட்டார். இதனால் பயந்தபோன ஆசாமி பெட்டியில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் குற்றவாளியை கண்டறியும் பணியை தொடங்கினர். ரெயில் நிலையத்தில் உள்ளேயும், வெளியேயும் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் அடையாளம் காணப்பட்டு மாலை 4 மணி அளவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆசாமி கூலித்தொழிலாளி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சம்மந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.