திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 16-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10-30 மணிக்கு நடக்கிறது. முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு வேலை தேடுவர்களை தேர்வு செய்ய வருகை தர உள்ளனர். வேலை நாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ.,டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






