தாய் எடுத்த விபரீத முடிவு – தனியார் பள்ளியின் இரக்கமற்ற செயல்……

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில்சத்குரு குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி  இயங்கிவருகிறது. சோகண்டி அடுத்த அழகு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வேணுகோபால் என்பவரது மனைவி வசந்தகுமாரி தனது நான்கு வயது மகள் யாழினியை மழலைப் பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றுள்ளார்.

பள்ளியில், 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் கட்ட வேண்டாம் அதில் முதல் தவணையாக 13.500 ரூபாய் கட்டினால் போதும் மீதத்தொகையை சிறிது நாட்களில் கட்டினால் போதும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. பின்னர், மீண்டும், இரண்டு நாட்கள் கழித்து வசந்தகுமாரிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் முழுத்தொகையை கட்டினால் மட்டுமே உங்கள் குழந்தை பள்ளியில் அனுமதிக்கப்படுவாள் எனவே இன்று முழு தொகையும் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர். 

இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற வசந்தகுமாரி தங்களால் முழு தொகையும் கட்ட முடியாது என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு எங்களது குழந்தையை அரசு பள்ளியிலேயே சேர்த்துக் கொள்கிறோம் கட்டிய கட்டணத்தை திருப்பி தாருங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் 5000 ரூபாயை பிடித்துக்கொண்டு மீதித்தொகை 8500ரூ மட்டும் கொடுத்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்தச் செயலை, கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த வசந்தகுமாரி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விபரீத செயலால், 80 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவத்தை அறிந்த வசந்தகுமாரியின் உறவினர்கள், பள்ளியினை முற்றுகையிட முயன்றபொழுது காவலர்கள், அவர்களைத் தடுத்து அனுப்பிவிட்டார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரர் மற்றும் போலீசார் பள்ளியில் மேலும் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.