குடிநீர் வழங்க வலியுறுத்தி  காலி குடங்களுடன் சாத்தனூரில் பொது மக்கள் சாலை மறியல்…..

தஞ்சாவூர் மாவட்டம் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாத்தனூரில் உள்ள 7 தெருக்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள 7 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புக்கான பணிகள் தொடங்கின.

ஆனால், அந்தப் பணிகள் தரமாகவும், தண்ணீர் செல்வதற்கான குழாய்களை முறையாக மேற்கொள்ளாதது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அந்த கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா தலைமையில், ஆடுதுறை- தரங்கம்பாடி சாலை, சாத்தனூரில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் ராஜேஷ், திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் போலீஸார், அந்த இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், குடிநீர் வழங்குவதற்காக நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என உறுதிளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக வெண்ணிலா கூறியது, ” ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தரமானதாக அமைக்காதது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்ததால்,கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 2 கி.மீ.தூரம் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, சாத்தனூர் பகுதிக்கு தரமான குடிநீர் முறையாக வழங்காவிட்டால் மீண்டும் போராடுவோம்” என கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத