சென்னை:
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் என்கிற பெயரில் எந்த பணியாளரும் கிடையாது. டிக்கெட் பரிசோதகர் என்கிற பெயரில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளிகள் பணத்தை இழந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது எற்று தெரிவித்துள்ளது.