முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணையை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் கூறியுள்ளார்.
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக மிலானி என்பவர் அளித்த புகாரை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜூலை 7-க்குள் பதலளிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற ஆணையை மீறி செயல்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.








