நடிகர் விஜய்யை எதிராக நான் எதுவும் சொல்லவில்லை – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்…..

நான் கூறிய கருத்துகள் விஜய்க்கு எதிரானது அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

நடிகர் விஜய் 234 தொகுதிகளுக்கு சேர்ந்தாற் போல் சில விஷயங்களை செய்து வருகிறார். முதலில் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளின் போது 234 தொகுதிகளிலும் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தெரிவித்திருந்தார்

அது போல் 234 தொகுதிகளிலும் பட்டினி தினத்தின் போது மதிய உணவு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். பின்னர் தமிழகத்தில் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார்.

அந்த விழாவில் அவர் அரசியல் குறித்து பேசியிருந்தார். அடுத்த தேர்தலில் நல்ல, புதிய தலைவர்கள் வருவார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் வருங்கால வாக்காளர்களே என அழைத்திருந்தார். சில சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் 2026 சட்டசபை தேர்தலில் அரசியலுக்கு வருவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடித்துவிட்டால் முதல்வராகிவிடலாம் என நடிகர்கள் நினைக்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.

கேரளாவில் மம்முட்டி, கர்நாடகாவில் ராஜ்குமார், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் கிடைத்த புகழை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வராமல் அவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்களை ஓரங்கட்டி விட்டு மக்களை ஹைஜாக் செய்துவிடலாம் என நினைக்கிறார்கள். கருத்தியல் சார்ந்த களப்பணியாற்றி அரசியலுக்கு வரலாம். இதில் தவறே இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் அதை நான் வரவேற்கிறோம். அது போல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அம்பேத்கரையும் பற்றியும் மாணவர்கள் படிக்க வேணடும் என கூறியிருந்த நடிகர் விஜய்யின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு