சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் தினேஷ். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கிண்டி மடுவங்கரை வண்டிக்காரன் தெருவில் நேற்று இரவு 9 மணி அளவில் இவர் சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதை பார்த்ததும் தினேஷ் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்து ஓடினார். அப்போது 6 பேரும் விடாமல் தினேசை விரட்டிச்சென்றனர். இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மளிகை கடையில் தினேஷ் புகுந்தார். இருப்பினும் 6 பேரில் 2 பேர் கடைக்குள் புகுந்து தினேசை சரமாரியாக வெட்டினர். இதில் கடைக்குள்ளேயே தினேஷ் துடி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.








