“மண்ணின் மைந்தரான ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்க அண்ணாமலை யார்?” – கே.எஸ்.அழகிரி கொந்தளிப்பு

சென்னை: “தமிழகத்தின் மண்ணின் மைந்தரே முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அவரை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல அண்ணாமலை யார்?” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கர்நாடகத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் சொன்ன ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு அண்ணாமலை தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார். கர்நாடகத்தில் நடைபெறும் எதிர்கட்சிகளுடைய கூட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றால், அவர் திரும்ப தமிழகத்துக்கு வர முடியாது. ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற கோஷத்தை முன்வைப்போம் என்கிறார்.

கர்நாடக அமைச்சர் சொன்னதற்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தனது கடுமையான மறுப்பை தெரிவித்திருக்கிறார். எந்தக் காரணத்தை கொண்டும் மேகேதாட்டுவில் அணை கட்ட விட மாட்டோம் என்று அவர் உறுதியாக சொல்கிறார். ஆனால், அண்ணாமலையோ சிவகுமார் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரே ஒழிய, தமிழக நீர்வளத் துறை அமைச்சரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காரணம் அரசியல். தமிழக முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அண்ணாமலை. அவர் போய் மக்கள் பிரதிநிதியை உள்ளே விட மாட்டேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. சர்வாதிகாரத்தினுடைய உச்சவெறி அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. காவிரிப் படுகையின் மண்ணின் மைந்தர் மட்டுமல்ல, தமிழகத்தின் மண்ணின் மைந்தரே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அவரை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல இவர் யார்?

கர்நாடகத்தில் பொம்மை அரசாங்கம் இருந்த போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் சென்று மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்தில் ஒப்புதல் பெற்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் சட்டப்படி, மரபுபடி காவிரி நீரை பயன்படுத்துகிற மாநிலங்களின் அனுமதியை பெற்றுத் தான் மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மேகேதாட்டு அணை வரைவுத் திட்டத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், பாரதிய ஜனதா கட்சியினர் டெல்லியிலும், கர்நாடகத்திலும் சேர்ந்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் அனுமதியை கேட்காமல் அங்கீகாரம் அளித்தார்கள். மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முதல் முயற்சியும் இதுதான்.

காவிரி நீரை பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. மழைக்காலங்களில் எவ்வளவு நீர் தர வேண்டும், வறட்சி காலங்களில் எவ்வளவு நீர் தர வேண்டும் என்பது பற்றியும், இருக்கிற நீரை கர்நாடகத்தின் மற்ற ஏரிகளில் தேக்கி வைப்பது எவ்வளவு சட்ட விரோதம் என்பது பற்றியும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதனை யாரும் மீறி விட முடியாது.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே அந்த அணையை கட்டிவிட முடியாது. தமிழ்நாடு அரசும், தமிழக காங்கிரசும் மற்றும் எங்களுடைய கூட்டணி கட்சிகளும், சட்டமும், நீதியும் அதை ஒருபோதும் அனுமதிக்காது” என்றார் கே.எஸ்.அழகிரி.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.