1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். (குறள் : 111).
விளக்கம்:
பகை, நட்பு, அயல் என மூன்றிடத்தும் முறைதவறாது நடத்தப்பெற்றால் நேர்மை என்று சொல்லப்படும் ஓர் அறமே நல்லதாம் என்ற தகுதியைப் பெறுகிறது.






