தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னை செல்ல தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் இறப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவருக்கு பணி வழங்கியது தவறு. அவருக்கு நல்ல ஓய்வு அளித்திருக்க வேண்டும். எதனால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தங்கள் கட்சி வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞராக நியமித்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் சரியான முறையில் வாதத்தை எடுத்து வைக்காததும், முழுமையான ஆதாரத்தை சமர்ப்பிக்காததும்தான் இப்போதுள்ள அமைச்சர்கள் பலர் விடுதலையாவதற்கு காரணம். வரும் மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கிவிட்டோம்.
பூத் கமிட்டி, பாசறை கமிட்டி, மகளிர் குழு அமைக்கும் பணிகள் நடக்கின்றன. தற்போது 1.60 கோடி உறுப்பினர்கள் அ.தி.மு.கவில் உள்ளனர். வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி மிகப்பெரிய எழுச்சி மாநாடு மதுரையில் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் செய்திகளை பின்னர் அறிவிப்போம். வருமான வரித்துறை, அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை காரணமாக சுமார் 20 நாட்களாக திமுக அமைச்சர்கள் பயந்து கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





